முல்லைத்தீவில் எரிபொருள் நிலையத்திற்கு மதுபோதையில் சென்றவர்களால் பரபரப்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றவர்கள் மீது மதுபோதையில் கார் ஒன்றில் சென்ற நால்வர் தாக்குதல் நடத்தியதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (25.03.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
முறைப்பாடு
அதனையடுத்து, அதனை தடுக்க சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குவதற்காக எரிபொருள் தாங்கி திறந்திருந்த நிலையில், இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
