பிரித்தானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த அணுகுண்டு விமானங்கள்! நடுவானில் ஏற்பட்ட குழப்பம்
பிரித்தானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய அணுகுண்டு வீசும் விமானங்களால் நடுவானில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய வான்வெளியில் ரஷ்ய அணுகுண்டு வீசும் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன.
இதன் காரணமாக குறித்த விமானங்களை பிரித்தானிய போர் விமானங்கள் நடுவானில் தடுத்துள்ளதுடன்,இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸ் வழியாக போலந்து நாட்டு எல்லைக்குள் புலம்பெயர்வோரை அனுப்பி குழப்பம் விளைவித்தும், உக்ரைன் எல்லையில் போர்த்தளவாடங்களைக் குவித்தும் ஒருவிதமான போர்ப்பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவும் நேட்டோ நாடுகளிலுள்ள அதன் கூட்டாளிகளும் கருங்கடல் பகுதியில் திட்டமிடப்படாத போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில்,இந்த செயற்பாடு ரஷ்ய அதிபர் புடினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
