அநுராதபுரத்தில் கோர விபத்து: கணவன்-மனைவி உயிரிழப்பு!
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (05.04.2023) இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வீதியில் எதிரெதிர் திசைகளில் பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரேதப் பரிசோதனை
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களான 67 வயதுடைய கணவனும், 64 வயதுடைய மனைவியுமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், இச் சம்பவம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri