பொலிஸ் பாதுகாப்பு கோரும் தேரர்
மட்டக்களப்பிலுள்ள மங்களராமய மடத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதால், உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறையில் உள்ள பன்சல்கல ராஜமஹா விகாரையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாக தேரர் கூறுகிறார்.

தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ஐந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டதாகவும், இதனால் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |