அம்பாறை மாவட்ட கிராமமொன்றின் நுழைவாயில் விவகாரம்: இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தின் நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (05.07.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 21 வரை ஒத்திவைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
சம்மாந்துறை பிரதேசத்தில் சட்டரீதியாக அனுமதி பெறாமல் வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு எனும் பெயரில் கோபுரம் ஒன்று அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களினால் முறைப்பாடு ஒன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
முன்னிலையான பிரதிவாதிகள்
இதனையடுத்து, அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றுள்ளனர்.

வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டை இனவன்முறையினை ஏற்படுத்தும் என கடந்த வழக்கு தவணைகளில் சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
இது குறித்த வழக்கு நேற்று விசாணைக்குட்படுத்தப்பட்ட போது, மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு
இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்களையும் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் டி.கருணாகரன், குறித்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் 21 வரை ஒத்திவைத்தார்.

அதேவேளை, இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் இந்நிகழ்வை நடாத்துவது சரியானது அல்ல என கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam