அம்பாறை மக்கள் 2020இல் செய்த தவறை மீண்டும் செய்துவிட கூடாது: தவராசா கலையரசன் தெரிவிப்பு

Ampara Sri Lanka Politician Thavarasa Kalaiarasan
By DiasA Jun 11, 2024 11:38 AM GMT
Report

அம்பாறை (Ampara) மக்கள் 2020ஆம் ஆண்டில் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் (Thavarasa Kalaiarasan) தெரிவித்துள்ளார். 

தனது பன்முகப்படுத்தப்பட்ட 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மல்வத்தை திருவள்ளுவர்புரம் கலைமகள் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்காக அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்  இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் 

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பினும் ஆளுந்தரப்பு அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளை எங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட இடங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது இனம் மிக மோசமாகப் பதிக்கப்பட்டிருக்கின்றது.

அம்பாறை மக்கள் 2020இல் செய்த தவறை மீண்டும் செய்துவிட கூடாது: தவராசா கலையரசன் தெரிவிப்பு | Ampara People Won T Repeat Same Mistake Thavarasa

மேலும், உயிர், உடமை ரீதியான பல்வேறுபட்ட இழப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆகையால் நாங்கள் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் எம்மால் முடிந்தளவு எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றோம். நாங்கள் இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு எமது சமூக ரீதியாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஒரு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதி என்ற அடிப்படையில் எமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அநீதிகள் தொடர்பில் நாங்கள் பேசியே ஆக வேண்டும்.

கடந்த சில காலங்களாக அம்பாறை மாவட்டத்திலே பல முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டமென்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம். இதனை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால் எமது தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகள், அடக்குறைகள் மற்றும் வெளியேற்றப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாங்கள் அக்கறையோடு இருந்து செயற்படுகின்றோம்.

ஏனெனில், இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் இந்த மண்ணில் வாழ்வதற்கும் சகல பலன்களையும் அனுபவிப்பதற்கும் உரித்துடையவர்கள். அவ்வாறு உரித்துடைய ஒரு இனம் இனரீதியாக ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தின் பாதிப்பினை அனுபவித்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் தற்போது வந்து ஒரு சந்தர்ப்பம் கேட்டு நாங்கள் வழவைப்போம், அபிவிருத்தி தருகின்றோம் என்ற கோசங்களையெல்லாம் எழுப்பித் திரிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

பதவி விலகுவது தொடர்பாக ரிஷி சுனக்கின் தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு

பதவி விலகுவது தொடர்பாக ரிஷி சுனக்கின் தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் 

இது குறித்து நான் மிகவும் வேதனை தான் அடைகின்றேன். நானும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு எல்லைக் கிராமத்தில் இருந்து வந்தவனே. 2008ஆம் ஆண்டு இந்த நாட்டில் கிழக்கு மாகாணசபை பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரலாறுகளையும் அனைவரும் அறிவோம். 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலே நான் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளராக இருந்த போதும் கூட எமது நாவிதன்வெளி பிரதேசத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அப்போது மாகாண சபையில் இருந்தவர்களிடம் முறையிட்டும் எவ்விதமான அபிவிருத்தியும் நடைபெறவில்லை.

அம்பாறை மக்கள் 2020இல் செய்த தவறை மீண்டும் செய்துவிட கூடாது: தவராசா கலையரசன் தெரிவிப்பு | Ampara People Won T Repeat Same Mistake Thavarasa

அதேபோன்று மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் இந்த மாகாணத்தை ஆண்ட முதலமைச்சரிடம் பல விடயங்கள்  எடுத்துரைத்தோம். எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், தற்போது யுத்தம் மௌனிக்கப்பட்ட அந்த சாதக பாதகங்களை வைத்துக் கொண்டு எம்மை கபளீகரம் செய்து தொடர்ச்சியாக இந்த நாட்டில் கையேந்தும் இனமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில அரசியல்வாதிகள் செய்யும் செயற்பாடுகள் மனவேதனைக்குரியது.

நாங்கள் இந்த நாட்டில் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல எமது மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆதங்கத்தோடு, ஒரு நியதியோடு நாங்கள் செயற்படுகின்றோம். இந்த அரசாங்கமாக இருந்தாலும் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களாக இருந்தாலும் சரி தமிழ்த் தேசியம் என்று சொல்லுகின்ற கட்சியை இந்த நாட்டில் இருந்து இல்லாமல் செய்து அவர்கள் ஆக்கிரமிப்பையும், எந்த அநீதியையும் எதிர்த்து யாரும் குரல்கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி அவர்கள் நினைத்த விடயங்களை கையாளலாம் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றன.

எனவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினை, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகின்றார் நாங்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், செயற்பாட்டளவில் ஒரு சில சிறு சிறு விடயங்களை அவர் முன்னெடுத்திருந்தாலும், தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினை மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் செயற்பாட்டளவில் எதுவுமே நடக்கவிவ்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நேர்த்தியான அரசியல் 

ஆனாலும், நடக்கவில்லை என்பதற்காக நாங்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்க முடியாது. நாங்கள் பாதிப்புற்ற இனம், போராட்டம் என்றால் இதுதான் என இந்த உலகத்திற்கே காட்டிய ஒரு இனத்திலிருந்து வந்த நாங்கள் இந்த நாட்டிலே எமது மொழி கலை கலாசாரம் என்ற ரீதியில் எமது மக்களைப் பாதுகாத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அம்பாறை மக்கள் 2020இல் செய்த தவறை மீண்டும் செய்துவிட கூடாது: தவராசா கலையரசன் தெரிவிப்பு | Ampara People Won T Repeat Same Mistake Thavarasa

நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பேசும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது இனம் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். இவ்வாறானவர்களிடமிருந்து எமது இனத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எமது இளைஞர்களுக்கு இருக்கின்றது.

எது எமக்கு நேர்த்தியான அரசியல் எமது மக்களையும், இருப்பையும் காப்பாற்றும் அரசியல் என்பதை இளைஞர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 2020ஆம் ஆண்டு எமது மக்கள் கையாண்ட ஒவ்வெரு விடயமும் இந்த நாட்டில் எமது மக்களின் பிரச்சினை தொடர்பில் எம்மைக் கையாள முடியாதவர்களாக ஆக்கி விட்டார்கள்.

மேலும், கடந்த பொதுத்தேர்தலில் தனது சொந்த மாவட்டத்தில் கூட எதனையும் செய்ய முடியாத அரசியல்வாதி ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் இனரீதியான கருத்துக்களைச் சொல்லி மக்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெற்று இந்த மக்களையும் மண்ணையும் அநாதைகளாக்கிய விடயத்தை அனைவரும் அறிவோம். இந்த மாவட்டத்திலே எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கக்கூடிய எந்த அரசியற் கட்சியாக இருந்தாலும் அதற்கே எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சஜித் விஜயம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சஜித் விஜயம்

அரசியல் கொள்கைகள்  

இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏற்படுத்தப்பட்ட அநீதிகளை எமது மாவட்டத்தில் எல்லைக் கிராமத்து மக்களே அதிகம் அனுபவித்திருப்பார்கள். இன்று வரைக்கும் அவர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் இல்லை. எனவே, எமது மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த விடயங்களையும் மறந்துவிடக் கூடாது. நாங்களும் சொல்லுகின்றோம்.

அம்பாறை மக்கள் 2020இல் செய்த தவறை மீண்டும் செய்துவிட கூடாது: தவராசா கலையரசன் தெரிவிப்பு | Ampara People Won T Repeat Same Mistake Thavarasa

எமக்கு அபிவிருத்தி வேண்டும். அதேநேரம் எமது இருப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் செயற்படுகின்றோம். இந்த நாட்டின் பெரும்பான்மை அரசியற் தலைவர்கள் எமது மக்களின் இருப்பு, தீர்வு தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடி எதிர்க்க முன்வருவார்களாயின் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம்.

ஆனால், அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. எங்களை ஏமாற்றி அடக்கி ஆள வேண்டும் என்ற சிந்தனையோடே அவர்கள் இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட அவ்வாறான ஏமாற்றங்களை அனுபவித்தத்தன் விளைவாகவே இறுக்கமான சில கொள்கைகளோடு நாங்கள் தற்போது பயணிக்கின்றோம். அதற்கு எமது மக்கள் தான் எம்மோடு பலமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ரணில் விளக்கம்: கடுமையாக விமர்சிக்கும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ரணில் விளக்கம்: கடுமையாக விமர்சிக்கும் கர்தினால்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

இணுவில், கோண்டாவில், வெள்ளவத்தை

24 Jun, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, கோண்டாவில் மேற்கு

24 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், திருநெல்வேலி

30 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்

Penang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jun, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

19 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொடிகாமம், வெள்ளவத்தை

24 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், பாண்டியன்குளம்

08 Jul, 2023
மரண அறிவித்தல்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
18ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Scarborough, Canada

26 Jun, 2006
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், வட்டக்கச்சி, Saint, France

27 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

23 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Mount Claremont, Australia

26 Jun, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, Toronto, Canada

25 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Aldenhoven, Germany

23 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
மரண அறிவித்தல்

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை தெற்கு, காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, Mississauga, Canada, Brampton, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US