கிளிநொச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர்ப் பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றையதினம்(17) இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தனி நபர் ஒருவர் தனது காணியைச் சுத்தம் செய்யும் வேளை சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் குறித்த பகுதியில் நேற்றைய தினம் (17) அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெருந்தொகையான வெடிபொருட்கள்
மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan