குழந்தைகளை பார்ப்பதற்காக சென்ற அமெரிக்க பேராசிரியர்! முன்னாள் மனைவியின் கொடூர செயல்
அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான பிரெஸ்மிஸ்லாவ் ஜெஜியோர்ஸ்கி(Przemyslaw Jeziorski), தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கிரீஸ் நாட்டிற்கு சென்ற போது தனது முன்னாள் மனைவியால் கொல்லப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக பணிபுரியும் இவர், கிரீஸ் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்துள்ளார்.
இதனையடுத்து, அவர்களின் இரண்டு குழந்தைகளும் தாயின் பராமரிப்பில் கிரீஸ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில், தனது குழந்தைகளை காண கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் உள்ள தனது முன்னாள் மனைவியின் வீட்டுக்கு ஜெஜியோர்ஸ்கி சென்றுள்ளார்.
இதன்போது, அவரை அவரது முன்னாள் மனைவி துப்பாக்கியால் சுட்டதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிரீஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
