அமெரிக்க நிறுவனமொன்றின் ஆபத்தான பொருள்! கனடாவில் உடன் தடை
அமெரிக்க இ-கொமர்ஸ் நிறுவனமான எட்ஸியின்(Etzy) இணையதளத்தில் விற்பனைக்கு இருந்த மெழுகுவர்த்திகளுக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றினால் தீ ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெழுகுவர்த்திகளை பாவித்து அதன்பின்னர் தூக்கி வீசப்பட்ட பிறகும் மீண்டும் தீப்பிடிக்கக்கூடும் அபாயம் உள்ளது.
எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை
அதனால்தான் அவை கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 10 மெழுகுவர்திகளைக் கொண்ட மெஜிக் ரீ-லைட்டிங் மெழுகுவர்த்திகள் தற்போது எட்ஸி இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
குறித்த மெழுகுவர்த்திகளின் 5 பொதிகள் இதுவரை கனடாவில் விற்கப்பட்ட போதிலும் அதனால் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
