பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா நம்பிக்கையான நாடு அல்ல: ஈரான் பேராசிரியரின் அதிரடி கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முரண்பட்ட அறிக்கைகள் காரணமாக, ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவை ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகக் கருதவில்லை என்று ஈரானியப் பேராசிரியர் முஸ்தபா கோஷ்ஷெஷ்ம் தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், தற்போதைய பதற்றமான சூழல் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.
கடந்த இரவு ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள், எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அமெரிக்கா தகுதியான நாடு அல்ல என்பதை டெஹ்ரானுக்கு உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போராட்டங்கள்
அமெரிக்கா தனது தற்போதைய போக்கைத் தொடரும் வரை, ஈரானும் போரைத் தொடரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானியப் படைகள் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள "முழு தயார் நிலையில்" இருப்பதாகவும், ஒவ்வொரு இரவும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த மக்கள் "தொடர் எதிர்ப்பை" அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய மோதலில் ஈரானே மேலாதிக்க நிலையில் இருப்பதாக டெஹ்ரான் நம்புகிறது.
மத்திய கிழக்கில் அமைதி
எதிர்காலத்தில் எந்தவொரு மோதல் ஏற்பட்டாலும், அந்த மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் உறுதியாக இருப்பதாகவும் கோஷ்ஷெஷ்ம் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், பேராசிரியர் கோஷ்ஷெஷ்மின் இந்தக் கருத்துக்கள் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையே காட்டுகின்றன.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam