இந்து மதத்திற்காக அமெரிக்க மாகாணமொன்றில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை
அமெரிக்கா மாகாணமான ஜோர்ஜியா இந்து மதம் குறித்து அவதூறாக பேசுவதை குற்றமாக அங்கீகரிக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும் வகையிலான சட்டங்கள் உள்ளன.

தொடரும் டொனால்ட் ட்ரம்பிற்கான அதிர்ச்சிகள்! அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
இந்து மதம்
ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு.
இந்த நிலையில் இந்து மதம் குறித்து அவதூறாக பேசுவதை குற்றமாக அங்கீகரிக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை ஜோர்ஜியா அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் இந்துக்கள் வசிப்பதாக கூறப்படும் நிலையில், இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.9% ஆகும். இதில் ஜோர்ஜியாவில் மட்டும் 40,000ற்கும் அதிகமான இந்துக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் முதல் மாகாணமாக ஜோர்ஜியாவில் இந்த பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அபிஷேக் சர்மாவின் சதத்துடன் அபார வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி! புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
ஜோர்ஜியா மாகாணம்
இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வெறுப்பு குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான தற்போதைய சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மாநில மற்றும் உள்ளூர் சட்ட நடைமுறையாக்க நிறுவனங்கள் இந்து வெறுப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும்.
ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு, ஜோர்ஜியா இந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய போது தொடங்கப்பட்ட பணியின் நீட்டிப்பாகும்.
"கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு, குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைக் கண்டோம்," என்று பிரேரணையை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் ஷான் ஸ்டில் கூறியுள்ளார்.
ஜோர்ஜியா மாகாணம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பிரேரணையை, அமெரிக்க மற்றும் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொந்த நாட்டு வீரரை தோற்கடித்த ரஷ்யர்: "துரோகி" எனக் கூறி பதக்கம் கொடுத்த நிர்வாகி..சர்ச்சை வீடியோ News Lankasri
