ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்கை முடக்கிய எலன் மஸ்க்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன் முடக்கியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களான ''தி நியூயார்க் டைம்ஸ், சி.என்.என்,
இ தி வாஷிங்டன் போஸ்ட்'' உள்ளிட்ட பல நிறுவன ஊடகவியலாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
எலான் மஸ்க்கின் அசைவுகளை இரகசியமாக கண்காணித்து, அவர் குறித்து செய்திகளை வெளியிட்டதன் காரணமாக ட்விட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியான மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடக சுதந்திரம் பறிப்பு
டுவிட்டர் நிறுவனத்துக்கு ''ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம்'' தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், டுவிட்டரில் ஊடகவியலாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது.
''ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல, சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் எனவும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும்'' எனத் தெரிவித்தார்.
தடைகள் விதிக்கப்படும்
ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா கருத்துத் தெரிவிக்கையில், ''ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
