அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில், இவரையும், இவருக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய இருப்பதாக ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயது Tyler Anderson என்பவர் இந்த வழக்கில் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பதிவு செய்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு குறுந்தகவல்களில், அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டனை
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்த ஆண்டர்சனை கைது செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுத்த சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் ஆண்டர்சன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் ஆகியவற்றை எதிர்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
