தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தம்
2025 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
புதிய கட்டமைப்பின் கீழ் 150,000 ரூபாய் சம்பளத்துக்கு 14 வீத வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படும்.
வரிக்குறைப்பு
200,000 ரூபாய் சம்பளத்துக்கான வரிக்குறைப்பு 20வீதமாக இருக்கும்.
அதேநேரம் 300,000 ரூபாய் சம்பளத்துக்கு 25 வீத வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதாந்தம் 450,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 76,000 ரூபாய் வரி 12,500 ரூபாவால் குறைக்கப்பட்டு 63,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.
மாதாந்தம் 6 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 120,000 ரூபாய் வரி 12,500 ரூபாவால் குறைக்கப்பட்டு 107,500 ரூபாவாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |