அம்புலுவாவ பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் அபாயம்:18 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றம்
அம்புலுவாவ பகுதியில் வசிக்கும் 18 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று கட்டிட ஆராய்ச்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
அம்புலுவாவ மலையின் சரிவில் உள்ள பல பகுதிகளை நிலச்சரிவு அபாயகரமான மண்டலமாகக் கருதி, கட்டுமானம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அந்தப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக ஆபத்தான பகுதிகள்
அம்புலுவாவ பல்லுயிர் வளாகத்தின் நுழைவாயிலின் சிறிது தூரத்தில் தரையில் ஏற்பட்டுள்ள வெடிப்பை கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கண்காணிப்புக் குழு பார்வையிட்டதோடு அந்தப் பகுதியில் உள்ள வீடுகளையும் ஆய்வு செய்துள்ளது.
அந்த வீடுகளில் 07 வீடுகள் அதிக ஆபத்துள்ள நிலையிலும், 06 வீடுகள் நடுத்தர ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அம்புலுவாவ வட்டேகடே பகுதியில் 11 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிக ஆபத்தான நிலையிலுள்ளது.

12 வீடுகள் நடுத்தர ஆபத்தில் அமைந்துள்ளது. அதன்படி, மேற்கண்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் எவ்வித கட்டுமானம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.மேலும் மிகவும் உணர்திறன் வாய்ந்த நிலச்சரிவு மண்டலங்களாகக் கருதப்பட வேண்டும்.
நடுத்தர ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட பின்னர் அல்லது குறிப்பிட்ட அளவை விட மழைப்பொழிவு அதிகமாக இருந்தால், அவர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.