அம்பிகையின் போராட்டம் தொடர்பில் பிரித்தானிய அரசின் கரிசனை
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி, சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்ட அம்பிகை செல்வகுமாரின் போராட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சிலிருந்து தொடர்புடையவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி நாங்கள் அம்பிகையின் நலனில் அக்கறை கொண்டிருக்கின்றோம்.
இந்த போராட்டத்தை அவர் முடிவுக்கு கொண்டு வருவது எங்களுக்கு நிம்மதியாக இருக்கின்றது என அவர்களிடத்தில் அறிவித்துள்ளார்கள். மேலும், அம்பிகை செல்வகுமாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றையாவது நாங்கள் நிறைவேற்றுவோம் எனவும் பிரித்தானிய அரச தரப்பிலிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam