வெளிநாட்டு தூதுவர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விசேட சந்திப்பானது, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மரியாதை நிமித்தமாக வருகை தந்திருந்த சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடியுள்ளனர்.
தூதுவர்கள் இணக்கம் தெரிவிப்பு
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் அவரி்டம் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam