பாட்டாளிபுரம் பூஞ்சோலையாள் பத்திரகாளி அம்பாள் வருடாந்த வேள்வியும்: கலைவிழாவும் நூல் வெளியீடும்
மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் இன்று மாலை (07) இடம் பெற்றது.
06.06.2024 காலை சுப நேரத்தில் மடைப்பெட்டி அருள்மிகு பாட்டாளி புரம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி எடுத்துவரப்பட்டது.
அதன்பின்னர் விசேஷ அபிசேக ,அலங்கார பூஜைகள் அருள்மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீபத்திரகாளி அம்பாளுக்கு நடைபெற்றது.
பாடசாலை மாணவர்கள்
கலை இலக்கிய விழாவில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
மாலை நிகழ்வில் ஊடக கலை இலக்கிய ஆன்மீக செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். ஊடகத்துறையில் அரசரெத்தினம் அச்சுதன் கெளரவிக்கப்பட்டார்.
ஆலயத்தின் பிரதான செயற்பாட்டாளர் பொ. சற்சிவானந்தம் தலைமையில் ஆலயத்தின் பூஞ்சோலையாள் வரலாற்று நூல் வெளியீடும் இடம் பெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழக்கப்பட்டது. 07.06.2024 இன்று அதிகாலை தீமிதிப்பு இடம் பெற்று பொங்கல் விசேஷ பூஜை நிகழ்வுகள் நிறைவடைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |