மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் தீர்ப்பை எழுதியது யார்! எழுந்துள்ள பலத்த சந்தேகம்..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொல்லப்பட்ட வழக்கு தீர்ப்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதால், அதனை விசாரணை செய்யுமாறு பொது மக்கள் அமைப்புகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அரகலய போராட்டத்தின் போது அரலி மாளிகையில் நடைபெற்ற சட்டவிரோதக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொல்லப்பட்டார்.
தீர்ப்பை எழுதியதில் பலத்த குழப்பம்
இந்த பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் அது முழுமையாக எழுதித் தீர்க்கப்பட்டிருந்ததா?
மேலும், அந்த தீர்ப்பை உண்மையில் அந்த இரண்டு நீதிபதிகளே எழுதினார்களா?, அல்லது வேறு யாரேனும் தரப்பினரால் எழுதப்பட்டதா? என்பதையும் விசாரிக்க வேண்டும் என அந்த அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
அந்த பெரும்பான்மை தீர்ப்பின் சுமார் 80 சதவீதப் பகுதி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் வழக்கை முன்னெடுத்த ஜனக பண்டார என்ற அதிகாரி எழுதி சமர்ப்பித்த வாதத்துடன் ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த எழுத்து மூல வாதத்தில் உள்ள காற்புள்ளி, முற்றுப்புள்ளி உள்ளிட்ட குறியீடுகளும் அப்படியே தீர்ப்பில் இடம்பெற்றுள்ளதாகவும், எழுத்து மூலத்தில் உள்ள சில பக்கங்கள் அவ்வாறே தீர்ப்பில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை வழங்கிய விதம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam