ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் சிங்களக் கட்சிகளின் தாயக அனுமதி!
சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களின் வாக்கு
“சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது மூன்று பெரிய பாதிப்புகள் ஏற்படும். ஒன்று சிங்களக் கட்சிகள் தாயகத்தில் ஊடுருவும். இது காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும்.
சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். விகாரைகள் நல்லூரிலும் வரலாம். செல்வச் சந்நிதியிலும் வரலாம். வல்லிபுர கோவிலிலும் வரலாம்.
இரண்டாவது ஆக்கிரமிப்புகள் என்பது சிங்கள அரசாங்கங்களில் தீர்மானங்களல்ல. அது சிங்கள பௌத்த அரசின் தீர்மானம்.
எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆக்கிரமிப்புகள் தொடரும். இதற்கு ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிறேமதாசாவோ, அநுர குமார திசாநாயக்காவோ விதிவிலக்காக இருக்கப் போவதில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
