பாதிக்கப்படுவது தமிழ் கடற்றொழிலாளர்கள் என்பதாலேயே நடவடிக்கை எடுக்கவில்லை: வடமராட்சி கடற்றொழிலாளர்கள்
பாதிக்கப்படுவது தமிழ் கடற்றொழிலாளர்கள் என்பதாலேயே கடற்படை எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடந்த ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எல்லை தாண்டும் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறுவதால் நாம் உண்டியலில் பணம் சேர்த்து இந்திய கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு கூற இருப்பதாகவும் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்கள்
இதேவேளை, இந்தியா செல்வதற்கு தம்மிடம் பணம் இல்லை என்றும் இதனால் அதற்கான பணத்தினை தமது அங்கத்தவர்களிடம் சேகரித்து அதில் சேருகின்ற பணத்தை வைத்தே தாம் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவித்த கடற்றொழிலாளர்கள் நிதி சேகரிப்பு உண்டியல் மூலம் இன்றைய தினம் (18.10.2023) நிதி சேகரிப்பதை ஆரம்பித்துள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களால் தமது தொழில்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும், சொத்துக்கள் இழக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சர், கடற்படை உயர் அதிகாரிகளுடனும் பேசியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனாலேயே தாம் இந்தியா சென்று கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
