சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் நகைச்சுவையானவை: சஞ்சீவ எதிரிமான்ன
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் நேரடித் தொடர்புடன் தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரான் ஹாஷிமுக்கு, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவர் தேவையா என்று மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் கொல்லப்பட்டதால், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு இது குறித்து மிக விரிவான விசாரணைகளை நடத்தியது.
குற்றச்சாட்டுகள்
தாக்குதல்காரர்களின் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், அமெரிக்க நீதிமன்றத்தில் அவர்கள் சத்தியக்கடதாசி ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, சஹ்ரான் ஹாஷிமே இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்பதும், இலங்கையில் 'ஐ.எஸ்.ஐ.எஸ். - இலங்கை' என்ற பெயரில் அவர் இந்த அமைப்பை வழிநடத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி, அவர்களின் அனுமதியைப் பெற்றே இத்தாக்குதல்களை நடத்தியுள்ளார் என்பது சர்வதேச ரீதியாக அம்பலமாகியுள்ளது.
தமிழர்கள் ஒரு தேசிய இனம்வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்! ஜப்பான் தூதுவரிடம் மனோ கணேசன் வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இவ்வாறானதொரு பின்னணியில், குண்டுகளைத் தயாரித்துத் தாக்குதலுக்குத் தயாரான இந்தக் குழுவுக்கு, சுரேஷ் சலே தான் தேவாலயத்தைக் காட்டினார் என்று கூறுவது ஒரு நகைச்சுவையான விடயமாகும்.

இன்னும் சில நாள்களில் உயிர்த்த ஞாயிறு எப்போது வரும் என்று நாள்காட்டியைக் காட்டியது கூட இவர்தான் என்று இவர்கள் கூறக்கூடும்.
சுரேஷ் சலே தற்போது எதிர்நோக்கி வரும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு அரசியல் ரீதியாக நியாயம் கற்பிப்பதற்காகவே இவ்வாறான உண்மைக்குப் புறம்பான கதைகள் பரப்பப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri