பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
கோவிட் - 19 தடுப்பூசிகள் பொது மக்களுக்கு ஏற்றப்படும் பணிகள் ஆரம்பித்த வேளையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொத்தட்டுவ மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நேற்று கோவிட் - 19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது சுமார் 2000 பொது மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட் - 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் பொது மக்கள் மத்தியில் சமூக இடைவெளி தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
