தேர்தலை எதிர்கொள்ளும் திறன் பொதுஜன பெரமுனவுக்கு உண்டு - திஸ்ஸ குட்டியாராச்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பலவீனமடைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இன்னும் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இரு பதவிகளையும் இராஜினாமா செய்த பசில் ராஜபக்சவின் அச்சத்தில் இருந்து நாடு இப்போது விடுபட வேண்டும் எனவும் அவர், முன்னாள் நிதியமைச்சராக இருக்கட்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
பசில் ராஜபக்ச மீது பொதுமக்களுக்கு அச்சம்
பசில் ராஜபக்ச மீது பொதுமக்களுக்கு அவ்வாறான அச்சம் உள்ளது, அவர் ஏற்படுத்திய விளைவு குறித்து அவர் பெருமைப்பட வேண்டும் என தாம் கருதி வந்ததாகவும் குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை குற்றம் சாட்டாதீர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் குறை
கூறாதீர்கள். ஒரு கட்சி என்ற ரீதியில் அது அதிக தியாகங்களைச் செய்துள்ளது
எனறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும்
தெரிவித்துள்ளார்.