மன்னாரில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வலை: கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
மன்னார் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வலை தொழிலிடம் வருவதாக மன்னார் வங்காளை கிராம மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை(31) யாழில் இடம்பெற்ற வடக்கு - கிழக்கு இளையோர் கடற்றொழிலாளர் கூட்டமைப்பு அங்குரார்ப்பாண நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கு கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு - கிழக்கு இளைஞர் கடற்றொழிலாளர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம்.
ஏனெனில் வடக்கு - கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இளம் சமூகம் கூட்டாக இணைந்து எமது பிரச்சினை தொடர்பில் குரல் கொடுப்பதற்கு இந்த அமைப்பு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
வடக்கு - கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் 2011 ஆம் ஆண்டு மன்னாரில் பட்டி வலையை நிறுத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பில் பட்டி வலையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நீதிமன்ற தீர்ப்பை மீறி இன்று வரை தொடர்ச்சியாக பட்டி வலைத் தொழில் இடம்பெற்று வருகிறது.
வடக்கு - கிழக்கு கடலில் சட்டவிரோத தொழில்களை நிறுத்தாது விட்டால் எதிர்காலத்தில் மீன் இனங்களை கடலில் காண முடியாத நிலை ஏற்படும்.
ஆகவே வடக்கு கிழக்கு இளம் கடற்றொழிலாளர் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு கடல்களில் இடம்பெறும் சட்ட விரோத தொழில்களை தடுப்பதற்கு முன்வருவதோடு அதற்கு எதிராக ஒன்று இணைந்த போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
