இலங்கை மக்களின் நன்மையை பொருட்படுத்தாத அரசாங்கம்: ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு
இலங்கை (Sri Lanka) அரசாங்கம் தனது மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள தவறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் சந்திப்பு ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அதற்கு அரசாங்கம் உடன்படவில்லை என்று அவர் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தனியார் கடன் பத்திரதாரர்களின் தற்காலிக குழு உறுப்பினர்களுடனான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக இலங்கை அறிவித்துள்ளது.
சாகல ரத்நாயக்கவின் கருத்து
அந்த அறிவிப்பின் விடயங்களை ஆராய்கின்றபோது, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதை கவனிக்கமுடிகிறது.
ஒரு மோசமான ஒப்பந்தத்திற்கு உடன்படுவதை விட விவாதங்களில் இருந்து விலகுவது நல்லது என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக ஹர்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், கடன் பத்திரக்காரர்களுடன் உடன்படிக்கைக்கு வரமுடியவில்லை என்று கூறிவிட்டு நான்கு விடயங்களில் இரண்டு விடயங்களில் இரண்டு தரப்பினரும் இணக்கம் கண்டதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க கூறியது சரியானது அல்ல என்று ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹர்ச டி சில்வாவின் கோரிக்கை
இந்த இணக்கமின்மையின் மூலம், அரசாங்கத்தின் மாற்று மறுசீரமைப்பு முன்மொழிவு, பத்திரதாரர்களால் நிராகரிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
இந்நிலையில், தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்த மறுசீரமைப்பு செயற்பாட்டில் அரசாங்கம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
அத்துடன், அடுத்த அரசாங்கமும் வரப்போகும் அரசாங்கமும் அதன் இறுதி மாதங்களில்
இந்த அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்பேற்க
வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |