மட்டக்களப்பு மாநகரசபையின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் முதல்வர் தி.சரவணபவன் குற்றச்சாட்டு (Photos)
"நாட்டில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காணப்பட்டாலும் மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள நிதியை கொண்டாவது அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதவகையில் சில அதிகாரிகளின் செயற்பாடுகள் உள்ளதாக" மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 60வது அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.
மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் மதிவண்ணன், பிரதி ஆணையாளர் சிவராஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் மாநகரசபை உறுப்பினர்களின் பிரசன்னத்துடனும் இன்றையசபை அமர்வு வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.
இதன்போது சபையினை ஆரம்பித்து மாநகரசபை முதல்வர் தலைமை உரையினையாற்றியதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறிப்பாக கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தகனம் எரிக்கும் இயந்திரம் பொருத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறைவேற்ற நிர்வாகம் முயற்சி செய்யவில்லையென்றும் தற்போதைய பொறியியலாளர் அது தொடர்பில் அக்கரையற்று செயற்படுவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நிதிகள், ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றபோதிலும் அவற்றினை நடைமுறைப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்காமை தொடர்பில் மக்களின் பிரதிநிதிகளிடமே கேள்வியெழுப்புவதாகவும் மாநகரசபையின் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தான் இவ்வாறான பின்னடைவுக்கு காரணம் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நிலையுள்ளதாகவும் இங்கு கருத்து தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் து.மதன் தெரிவித்துள்ளார்.
மாநகரசபையின் செயற்பாடுகள் பின்தள்ளப்படுவதற்கு காரணமானவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் கடமைகள் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு பதிலீடுகளாகவுள்ளவர்களை கொண்டு மாநகரசபையின் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு கருத்துகள் மாநகரசபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டதுடன், தொடர்ந்து மாநகரசபை அமர்வு முன்கொண்டு செல்லப்பட்டதுடன், பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
