யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
பழிவாங்கல் முயற்சி

மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் அதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரின் முறைப்பாடு

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 10 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam