முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் அனைவரையும் ஒன்று திரளுமாறு அழைப்பு! (Video)

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka Politician Mullivaikal Remembrance Day
By Bavan May 17, 2023 01:54 PM GMT
Report

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ”முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல்” மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையில் நாளை (18.05.2023) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - வாவிகரை வீதியிலுள்ள நாடளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று (17.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளார்.

“மே 18 ஒட்டிய ஒரு வாரம் முள்ளிவாய்க்கால் தினமான வாரம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் துக்கமான கரி வாரமாக தமிழ் மக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டு நினைவு கூர்ந்துவரும் இந்த வேளையிலே இலங்கை அரசு தன்னுடைய போர் வெற்றியை கொண்டாடி வருகின்றது.


2009 மே 18 காலப்பகுதியில் ஒரு இலச்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் இந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக முன்னாள் மன்னார் ஆயர் யோசப் இராயப்பு வெளியிட்டார்.  கிட்டத்தட்ட இந்த பேர் தொடங்கிய காலமிருந்து 3 இலட்சம் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் பல தலைவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள பேரினவாத இனவாதியான சரத்வீரசேகர கேள்வி 

இருந்தபோதும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த ஆண்டும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிங்கள பேரினவாத இனவாதியான சரத்வீரசேகர இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த நினைவு தினத்தையிட்டு இடம்பெறும் ஊர்தி பவனி மற்றும் விளக்கேற்றல்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்கள் போன்றவை எவை எதற்காக என்ற கேள்வி எழுப்பியிருந்தார். 

உண்மையிலே எங்கள் மக்கள் எங்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கு நினைவு கூறவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது அந்தவகையில் நாங்களும் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்கள் கோவிட்டினால் அலுவலகங்கள் வீடுகளில் நினைவு கூர்ந்தோம் இருந்தபோதும் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நாளை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு நினைவு கூற ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே இந்த நினைவேந்தலில் இனமத சமய வேறுபாடுகளின்றி ஒரு உணர்வு பூர்வமான தமிழ் பேசும் மனிதனாக தமிழினத்திற்காக தமிழினத்தின் உரிமைக்காக போராடிய இனமாக இதை நினைவு கூறுவதற்க அனைவரும் ஒத்துழைத்து கல்லடி கடற்கரைக்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு”  கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 

மேலதிக செய்தி - குமார் 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US