இஸ்ரேலின் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சர்வதேசம்
இஸ்ரேலின் இராணுவ சிவில் கட்டமைப்புகளை காண்பிக்கும் காணொளிகளை ஹிஸ்புல்லா வெளியிட்டதினை தொடர்ந்து குறித்த அமைப்புக்கு எதிரான முழுமையான யுத்தம் தொடர்பில் இஸ்ரேல் எச்சரிகை விடுத்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட காணொளிகளை ஹிஸ்புல்லா வெளியிட்டதினை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்,
''நாங்கள் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் லெபானிற்கும் எதிரான தாக்குதல்களின் விதிமுறைகளை மாற்றும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் முழுமையான யுத்தமொன்றில் ஹிஸ்புல்லா அமைப்பு அழிக்கப்படும்.
ஹிஸ்புல்லா அமைப்பு
லெபனான் மோசமாக தாக்கப்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தனது காணொளியில் இஸ்ரேலின் ஹெய்பா நகரின் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை காண்பித்துள்ளது.
வணிக வளாகங்கள் உயர்மாடிக்கட்டிடங்கள் போன்றவற்றையும் காண்பித்துள்ளது .
?????BREAKING - HEZBOLLAH REVEALS THAT ISRAEL CANNOT HIDE ANYTHING ANYMORE- DRONE FOOTAGE FROM HAIFA AND MORE.
— Suppressed News. (@SuppressedNws) June 18, 2024
Hezbollah releases the first episode of "The Hoopoe (Hudhud)," "aerial reconnaissance footage of areas in northern occupied Palestine, brought back by the aircraft of… pic.twitter.com/gUCTsVFE62
இந்த நகரம் லெபானான் எல்லையில் தென்பகுதியில் உள்ளது. ஹெய்பா நகரில் உள்ள இஸ்ரேலின் இராணுவகட்டுமானங்களையும் ஹிஸ்புல்லா அமைப்பு தனது காணொளியில் காண்பித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |