ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு! மரண விசாரணை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் இறப்புகளும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
மரண விசாரணை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட சுற்றறிக்கையில், இலங்கையில் குழந்தைகளின் இறப்பு பகுப்பாய்வில் இது ஒரு முக்கிய அங்கம் என்று, அமைச்சகம் எடுத்துரைத்தது.
பொதுவான காரணங்கள்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதங்களுக்கான பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய இறப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, இந்த நடைமுறை விதிக்கப்படுவதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த இறப்பு விகிதங்களைக் குறைக்க,இந்த இறப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்ய பிரேத பரிசோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது, ஒரு குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரிய தீங்கு, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் அல்லது விபத்துகளை உள்ளடக்கியதாக இருக்கும்போது மட்டுமே, அவற்றின் மீது, பிரேத பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
