அரசாங்கத்தை விமர்சிப்போர் அனைவரும் நீக்கப்பட வேண்டும்
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் அனைவரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த (Indika Anuruddha) தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைவரையும் நீக்க வேண்டும். அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. அரசாங்கத்தில் இருக்கின்றனர்.
அமைச்சர் பதவிகளையும் ஏனைய பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனால், அரசாங்கத்தை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் நீக்க வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு மிகப் பெரிய சேவைகளை செய்து வருகிறது. சில தவறுகள், குறைப்பாடுகள், முடிவுகளை எடுக்க நேரிட்டுள்ளது.
எனினும் இந்த முடிவுகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ எடுத்த முடிவுகள் அல்ல. அரசாங்கம் இயக்கும் சில இடங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள். இதனால், இவற்றை பேசக் கூடிய இடங்களாக நாடாளுமன்ற குழுக் கூட்டம், நாடாளுமன்றம் இருக்கின்றது.
அரசாங்கத்தின் குறைகளை இந்த இடங்களில் கூறாது, பொது இடங்களில் கூற வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை என்னால் கூற முடியும்.
எனினும் அரசாங்கத்தில் எவராவது செய்யும் தவறுகளை என்னால் கூற முடியாது. அரசாங்கத்தை விமர்சிப்போர் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும். அரசாங்கத்தை நடத்தக் கூடிய பலர் இருக்கின்றனர். 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் இருக்கின்றனர்.
அவர்களில் திறமையான பலர் இருக்கின்றனர். இதனால், இந்த திறமைசாலிகளுக்கு இடமளித்து, விலகிச் செல்ல வேண்டியவர்களுக்கு விலகிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
