புடினுக்கு மேலும் ஒரு தலைகுனிவு - நடவடிக்கை எடுத்த அவுஸ்திரேலியா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் காதலியான அலினா கபேவா மீது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பின்னர் தற்போது அவுஸ்திரேலியாவும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவின் பிரபலமான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 39 வயது அலினா கபேவா மீது புதிதாக அவுஸ்திரேலியா அரசு தடைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடினுடன் இரகசிய திருமணம்
ஒலிம்பிக் தங்க மங்கையான அலினா கபேவாவுக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இரகசிய திருமணம் முடிந்துள்ளதாகவும், இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், சமீபத்தில் மூன்றாவது முறையாக அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.
பிரித்தானிய அரசாங்கம் தடை விதிப்பு
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க, உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. கடந்த மே மாதம் கபேவா மற்றும் புடினின் முன்னாள் மனைவி லியுட்மிலா ஆகிய இருவருக்கும் எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை அறிவித்தது.
அத்துடன், விளாடிமிர் புடினுக்கு தொடர்புடைய அனைத்து வட்டாரங்களிலும் நடவடிக்கைகள் இறுகும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.