தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதியின் அணி குறித்து பெருமிதம்! அலி சப்ரி அறிவிப்பு
தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அணி குறித்து பெருமிதம் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
பாரிய நெருக்கடி
இலங்கை பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு தலைமை தாங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No matter the outcome of today’s election, I’m incredibly proud to have been part of President RW’s team. His leadership came at a time when our country was facing an unprecedented crisis. Back then, it felt like hope was lost—people were leaving in large numbers, queues for…
— M U M Ali Sabry (@alisabrypc) September 21, 2024
நாடு கடன் பொறியில் சிக்கியிருந்த நிலையில் ஜனாதிபதியே இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு சுபீட்சமான பாதையில் நகரத் தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.