நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்க தீர்மானம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக்குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கடிதம் அனுப்பி வைப்பு
இதற்கிணங்க, இவரது பதவி விலக்கல் குறித்த கடிதம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாவுக்கும், அலிசப்ரி ரஹீமுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தைப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லா, இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
