ஒமிக்ரோன் தொற்றின் அச்சுறுத்தல்! - இங்கிலாந்தில் எச்சரிக்கை நிலை அதிகரிப்பு
இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கோவிட் தொற்ற கண்டறியப்பட்டது. ஒமிக்ரோன் என்ற அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இதுவரை 63 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் அந்நாட்டில் எச்சரிக்கை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 1,239 பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒமிக்ரோன் தொற்று மொத்த எண்ணிக்கை 3,137 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நான்காவது நிலை என்பது தொற்று பரவல் அதிகரிப்பு நிலை, சுகாதார சேவைகள் மீதான அழுத்தம் உள்ளிட்டவையை குறிக்கும்.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அமைப்பான இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
