மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கை! கலைத்து துரத்திய தீயணைப்பு பிரிவினர் (PHOTOS)
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தீயணைப்பு பிரிவினர் கலைத்து துரத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, உடன் விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கலைத்துள்ளனர்.

சமூக விரோதச்செயல்கள்
இவ்வாறான சமூக விரோதச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை எனவும், தற்போது போதைப்பொருள் பாவனையில் மூழ்கியுள்ள சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இவ்வாறு சமூக அக்கறையின்றி செயற்படும் சில நபர்களால் எமது சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam