குறையும் மதுபானங்களின் விலைகள்! வெளியான தகவல்
உற்பத்தி வரிகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுமாயின், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையும் குறைவடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உற்பத்தி வரிகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது தொடர்பில் கண்காணிக்குமாறு மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு நிதியமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இதற்கமைய மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விற்பனை குறைவடைந்தால், அது மதுவரி திணைக்களத்தின் வருமானத்தை பாதிப்படைய செய்யும் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.