மதுபான நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
மதுவரி 14 வீதமாக அதிகரிக்கப்பட்டமையினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டில் 28.2 மில்லியன் லீட்டராக காணப்பட்ட மதுபான நுகர்வானது 2024ஆம் ஆண்டில் 27.2 மில்லியன் லீட்டராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுவரி வருவாய்
எவ்வாறாயினும், 2024ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 167.7 பில்லியின் ரூபா மதுவரி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீத அதிகரிப்பு என்பதுடன், கடந்த 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் மதுவரி வருமானம் 138.8 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri