மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள்: இஸ்ரேல் முழுவதும் ஒலிக்கும் அபாய எச்சரிக்கை ஒலிகள்
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏவுகணை தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
இந்நிலையில், ஈரானில் இருந்து ஏவுகணை ஏவுதல் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, தெற்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் இராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வெளியான அறிவிப்பினை தொடர்ந்து, அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri