சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்..!
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.
சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது.
மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.




