தீவிரவாத இயக்கத்திற்கு உதவும் வர்த்தர்..! சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
அல் கய்தா தீவிரவாத இயக்கத்திற்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்படும் இலங்கையருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் தொடர்பில் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த வர்த்தகர் அல் கய்தா இயக்கத்திற்கு நிதி, பொருள் மற்றும் தொழிநுட்ப ரீதியான உதவிகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத இயக்கத்திற்கு உதவும் நபர் தெடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்திச் செல்லும் இவர் சட்டவிரோத ஹவாலா பணப் பரிமாற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மடகஸ்கர் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இரத்தினக்கல் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இலங்கையில் தற்பொழுது வதியவில்லை எனவும், டுபாயில் வசித்து வருகின்றார் எனவும் சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.