அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்காக 200,000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிதி ஒதுக்கீடானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தம்பலகாமம் மீரா நகர் வட்டார அமைப்பாளர் அஜீஸ் ஜபருள்ளாவின் கோரிக்கைக்கமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூபின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டு கடிதம்
இந்நிலையில், நேற்றைய தினம்(28) தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய முதல்வர் M.N.A. அஹமட் நஷ்ரபிடம் உத்தியோகபூர்வ நிதி ஒதுக்கீட்டு கடிதம் கையளிக்கப்பட்டதுடன் வேலைத்திட்ட ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் தம்பலகாமம் மத்திய குழுத் தலைவரும் அரசியல் அதிகார உயர்பீட உறுப்பினருமாகிய ஆசிரியர் M.S.ஐயூப் கான், மத்திய குழு செயலாளர் ஆசிரியர் H.M.ஹனீஸ், மீரா நகர் வட்டார அமைப்பாளர் அஜீஸ் ஜபருள்ளா, மத்திய குழு உறுப்பினர்களான E.L. அறூஸ் மற்றும் A.A. கான் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.