அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்
அக்குரணை, தொடங்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (11) ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம்
குடியிருப்பாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் வந்து தீயை அணைத்து, வீட்டின் ஜன்னலை உடைத்து, காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மற்ற இருவரும் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து அலவதுகொடபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam