அக்குரேகொட இரட்டைக் கொலை : பாதுகாப்பு தரப்பில் வெளியான தகவல்
அண்மையில் அக்குரேகொடவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், தேசிய பாதுகாப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ முகாம்களிலிருந்து ஆயுதங்கள்
தாக்குதலில் உயிரிழந்த வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17.02.2026) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த சம்பவத்தால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலையை ஒருபோதும் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:"இந்த நாட்டில் யாருடைய உயிரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. எவருடைய கைகளாலும் இன்னொருவர் உயிரிழப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை.
அனைவரின் உயிரையும் பாதுகாக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதற்காகப் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம். சமூகத்தில் பெருமளவான ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன. கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.
சில இராணுவ முகாம்களிலிருந்து பாதாள உலகக் குழுக்களுக்கு ஆயுதங்கள் சென்றமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் சூழலிலேயே இவ்வாறான கொலைகள் இடம்பெறுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan