இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி
இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பீஹாரில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண ஹொக்கி போட்டிகளை மையப்படுத்தி இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹல்கம் தாக்குதலுக்கு பின்னர்
அந்த வகையில் இந்தப்போட்டிகளுக்காக பாகிஸ்தானிய ஹொக்கி அணி, இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. எனினும் இது தொடர்பில் பாகிஸ்தானின் தரப்பில் இருந்து இன்னும் கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, காஸ்மீர் பஹல்கம் தாக்குதலுக்கு பின்னர் இரண்டு நாடுகளும் போர் ஒன்றில் ஈடுபட்ட நிலையில், இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை முக்கிய அம்சமாக பார்க்கப்படுவதாக, இராஜதந்திர தரப்பினர் கூறுகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri