மக்களின் வைப்புக்களில் கை வைப்பதற்கு யாருக்கும் இடமில்லை! அகிலவிராஜ்
பொதுமக்களின் வங்கி வைப்புகளில் கை வைப்பதற்கு எவருக்கும் இடமில்லை என ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை காரியாலயம் அமைந்துள்ள சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வங்கி விடுமுறை
மக்களின் வங்கி வைப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை எனவும் வங்கி விடுமுறை குறித்து தேவையற்ற வாதப்பிரதிவாதங்களை சிலர் உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஸ்வசும போன்ற மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உட்படுத்தி இந்த செயல்திட்டத்தை குழப்பக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் நியாயமான முறையில் இந்த கொடுப்பனவு சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri