நீதிமன்றை அவமதித்த அஜித் பிரசன்னவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம் (08.06.2023) குறித்த தண்டனையை விதித்துள்ளது.
கடந்த 2019ம்ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் ஒருசில மாஜிஸ்திரேட் நீதவான்களின் செயற்பாடு குறித்து கருத்து வெளியிட்டமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் குற்றவாளியாக காணப்பட்ட அஜித் பிரசன்ன, தற்போதைக்கு நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.
சிறைவாசம் நீடிப்பு
அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்துவரும் 4 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர், இந்தத் தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்விலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri