விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் அரசிடம் தேரர் கோரிக்கை
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரர் (Ajahn Brahmawanso Thera), விமானத்தை எவ்வாறு தவறவிட்டார் என்பது பற்றி விசாரணை செய்வதற்குப் பதிலாக, இலங்கை எவ்வாறு ஒரு சிறந்த நாட்டைப் பெற முடியும் என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கட்டு நாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளின் கவனயீனத்தினால் விமானத்தைத் தவறவிட்டு, சுமார் 12 மணிநேரம் தாமதமாகி தமது பயணத்தை ஆரம்பித்த நிலையில், தேரர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தேரர் காணொளி ஒன்றின் மூலம் கூறியுள்ளதாவது, 'எனது விமானத்தை நான் எவ்வாறு தவறவிட்டேன் என்பது குறித்து ஜனாதிபதி விசாரணையைத் ஆரம்பித்துள்ளார் என்று நான் அறிந்தேன்.
பயமின்றி தவறு செய்வார்கள்
தயவு செய்து எனது விமானத்தை நான் எவ்வாறு தவறவிட்டேன் என்பதைப் பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக, இன்னும் பலவற்றைக் கொண்ட ஒரு சிறந்த நாட்டை நீங்கள் எவ்வாறு பெற முடியும் என்பதைப் பற்றி விசாரிக்கவேண்டும்.
சிலர் தவறு செய்வார்கள். அது பெரிய விடயம் அல்ல. எனினும் மக்களைத் தவறு செய்ய அனுமதிக்கின்றபோது, அவர்கள் பயமின்றி தவறு செய்வார்கள்.
அன்று மாலை இலங்கைப் பிரதமர் பிரமுகர் ஓய்வறையில் இருந்தார் என்பது தனக்கு ஒருபோதும் தெரியாது.
விமானநிலைய அதிகாரிகள்
பேங்கொக்கில் இடம்பெறும் பெரிய நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக போதுமான நேரம் இருந்தது.
கவலைப்பட வேண்டாம், எல்லாம் திட்டமிட்டபடி உள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் கூறினார்கள்.
எனினும் தம்மை வாயிலுக்கு அழைத்துச் சென்ற வேளையில் விமானம் புறப்பட்டதைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
