வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இளைஞனுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
துபாயிலிருந்து கட்டார் வழியாக நாடு திரும்பிய இலங்கை இளைஞர் ஒருவரை விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யட்டியந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத செயல்
3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடத்தல் முயற்சி இடம்பெறவுள்ளமை தொடர்பில் தகவல் அறிந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் பிரிவு அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை முடித்துக்கொண்டு விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற முற்பட்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அவரது பைகளில் இருந்து ஒரு வகையை சேர்ந்த 20,000 சிகரெட்டுகளும், மற்றொரு வகையை சேர்ந்த 3,600 சிகரெட்டுகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், ஓ.ஐ.சி விமான நிலைய பொலிஸ் அதிகாரி எல்மோ மால்கம் மற்றும் அவரது குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam